குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்
By DIN | Published On : 04th January 2019 08:22 AM | Last Updated : 04th January 2019 08:22 AM | அ+அ அ- |

தருமபுரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, கல்லூரி முதல்வர் ஹேமா தலைமை வகித்தார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் கு.சிவப்பிரகாசம் வரவேற்றார். தருமபுரி மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் எம்.சிவகாந்தி, ஐடியல் தொண்டு நிறுவன இயக்குநர் சி.மனோகரன் ஆகியோர் குழந்தைகளின் உரிமைகள் மற்றும் அவர்களது பாதுகாப்பு தொடர்பாக மேற்கொள்ளப்படும் அரசின் நடவடிக்கைகள் குறித்து பேசினர். இதைத் தொடர்ந்து, குழந்தைகள் பாதுகாப்பு உறுதிமொழியேற்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில்,கல்லூரி மாணவ, மாணவியர் 1,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.