நெகிழிப் பொருள்களின் தீமைகள்: விழிப்புணர்வு ஊர்வலம்
By DIN | Published On : 04th January 2019 08:21 AM | Last Updated : 04th January 2019 08:21 AM | அ+அ அ- |

அரூரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள நெகிழிப் பொருள்களின் தீமைகள் குறித்து கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர்.
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய நெகிழிப் (பிளாஸ்டிக்) பொருள்கள் கடைகள், பல்பொருள் அங்காடிகள், அடுமனைகள், உணவகங்கள், இறைச்சிக் கடைகள் உள்ளிட்ட இடங்களில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த நெகிழிப் பொருள்களை பொதுமக்கள் நிலத்தில் வீசி எறிவதால் சுற்றுச் சூழல் மாசு ஏற்படுவதுடன், மண் வளம் பாதிக்கிறது. இதையடுத்து, நம்பிப்பட்டி அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அன்னை கல்வியியல் கல்லூரி மாணவ, மாணவியர் 300-க்கும் மேற்பட்டோர், நெகிழியால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு முழக்கங்களுடன் ஊர்வலம் சென்றனர். அரூர் கச்சேரிமேடு சாலை சந்திப்பு, வர்ணதீர்த்தம், பேருந்து நிலையம், கடைவீதி, பாட்சாபேட்டை, 4 வழிச் சாலை, திரு.வி.க. நகர் வழியாக இந்த ஊர்வலம் சென்றது.