"சிப்காட் தொழிற்பேட்டை தொடங்க வேண்டும்'
By DIN | Published On : 07th January 2019 09:49 AM | Last Updated : 07th January 2019 09:49 AM | அ+அ அ- |

தருமபுரி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் சிப்காட் தொழிற்பேட்டை தொடங்க வேண்டும் என ஏஐடியுசி மாவட்ட கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தருமபுரியில் ஏஐடியுசியின் 12-ஆவது மாவட்ட பிரதிநிதிகள் கூட்டம், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாதேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தை தேசிய செயாளர் வஹிதா நிஜாம், தொடக்கிவைத்தார். மாவட்டச் செயலாளர் மணி, பொருளாளர் முருகன், இந்திய கம்யூ. கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் நஞ்சப்பன், மாவட்டச் செயலாளர் தேவராசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 8,9 தேதிகளில் நடைபெறும் அனைத்து தொழிற்சங்க வேலைநிறுத்தத்துக்கு முழு ஆதரவு அளிப்பது, கட்டமான மற்றும் அமைப்புசார தொழிலாளர்களுக்கு விபத்து இழப்பீடாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். தருமபுரியை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.