தருமபுரி, கிருஷ்ணகிரியில் மாரத்தான் ஓட்டம்
By DIN | Published On : 07th January 2019 09:50 AM | Last Updated : 07th January 2019 09:50 AM | அ+அ அ- |

உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி கிருஷ்ணகிரி, தருமபுரியில் "கிளீன் தகடூர்' என்ற தலைப்பில் மாரத்தான் ஓட்டம் நடைபெற்றன.
உடல் ஆரோக்கியத்தின் அவசியத்தை வலியுறுத்தி கிருஷ்ணகிரியில் ஸ்ரீ விஜய் வித்யாலயா கல்வி குழுமம் சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தை அதன் தலைவர் டி.என்.இளங்கோவன் கொடியசைத்து தொடக்கிவைத்தார். ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தொடங்கிய இந்த ஓட்டம், அரசு மகளிர் கலைக் கல்லூரி சாலை, ராயக்கோட்டை சாலை, மாவட்ட விளையாட்டு அரங்க சாலை வழியாக சென்று பள்ளி வாளக்தில் நிறைவு பெற்றது. இதில் 3000 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
தருமபுரியில்... தருமபுரி மாவட்ட நிர்வாகம், தனியார் தொண்டு நிறுவனம் ஆகிய இணைந்து கிளீன் தகடூர் என்ற தலைப்பில் நெகிழி இல்லா தருமபுரியை உருவாக்குவோம் என வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி அருகே இந்த ஓட்டப் போட்டியை தருமபுரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பண்டிகங்காதர் தொடக்கிவைத்தார்.
4 பிரிவுகளாக நடைபெற்ற இந்தப் போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், மாணவிகள், பெண்கள், ஆண்கள், சிறுவர்கள், சிறுமிகள், பொதுமக்கள் என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.