கடத்தூர் கிரீன்பார்க் பள்ளி ஸ்ரீ வித்ய கணபதி ஆலயத்தில் சிறப்பு பூஜைகள்
By DIN | Published On : 03rd July 2019 10:08 AM | Last Updated : 03rd July 2019 10:08 AM | அ+அ அ- |

கடத்தூர் கிரீன்பார்க் சி.பி.எஸ்.இ. பள்ளியில் உள்ள ஸ்ரீ வித்ய கணபதி ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கடத்தூர் கிரீன்பார்க் சி.பி.எஸ்.இ. பள்ளி வளாகத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ வித்ய கணபதி ஆலய வருஷாபிஷேகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, மூலவரான நித்ய கணபதி, மஹா கணபதி சுவாமிகளுக்கு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. ஸ்ரீ மடம் ஸ்தாபகர் சிவஸ்ரீ அகிலரசு சிவம் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகளை செய்தனர். இந்த விழாவில், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் இல.வேலுசாமி, குலோபல் லா பவுண்டேசன் நிறுவனர் ரா.சரவண அரவிந்த், கடத்தூர் கிரீன்பார்க் கல்வி நிறுவனங்களின் தலைவர் எவரெஸ்ட் ரா.முனிரத்தினம், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.