பாலக்கோடு பலிடெக்னிக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 09th June 2019 05:27 AM | Last Updated : 09th June 2019 05:27 AM | அ+அ அ- |

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் சேர மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து அக் கல்லூரி முதல்வர் பா.சீ.செண்பகராஜா சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: பாலக்கோடு அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் நிகழாண்டு மாணவர் சேர்க்கைக்கு முதல் கட்ட கலந்தாய்வு கடந்த மே 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இக் கலந்தாய்வில் நிரப்பப்பட்ட இடங்கள் போக, மீதமுள்ள இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
எனவே, காலியாக உள்ள இடங்களில் மாணவர் சேர்க்கைக்கு, வருகிற ஜூன் 28-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதேபோல, நேரடி இரண்டாம் ஆண்டில் காலியாக உள்ள இடங்களில் சேர, வருகிற ஜூன் 12-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். முதல் கட்ட கலந்தாய்வில் பங்கேற்க இயலாதவர்களும் கலந்துகொண்டு சேர்க்கை பெறலாம் என்றார்.