தருமபுரி கல்லூரி மாணவியர் விழிப்புணர்வு பேரணி
By DIN | Published On : 30th March 2019 09:23 AM | Last Updated : 30th March 2019 09:23 AM | அ+அ அ- |

தேர்தலில் 100 சதம் வாக்களிக்க வலியுறுத்தி, தருமபுரியில் வெள்ளிக்கிழமை கல்லூரி மாணவியர் விழிப்புணர்வு பேரணி சென்றனர்.
பச்சமுத்து மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவியர் பங்கேற்ற இப் பேரணியை மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி கொடியசைத்து தொடங்கிவைத்தார். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு தொடங்கிய இப் பேரணி, நேதாஜி புறவழிச்சாலை, தொலைத்தொடர்பு நிலைய அலுவலகச் சாலை, கடைவீதி உள்ளிட்ட பல்வேறு முக்கிய வீதிகள் வழியாக பெரியார் சிலை அருகே நிறைவடைந்தது. இதில், வாக்களிக்க தகுதி படைத்த அனைவரும் தேர்தலில் 100 சதம் வாக்களிப்போம். ஜனநாயகம் காக்க நேர்மையாக வாக்களிப்போம் என்கிற விழிப்புணர்வு முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...