தருமபுரியில் மாரியம்மன் திருவிழா

தருமபுரி  நெசவாளர் நகர் ஓம் சக்தி விநாயகர், வேல்முருகன்,  ஓம்சக்தி மாரியம்மன் திருக்கோயில்களில் பௌர்ணமி

தருமபுரி  நெசவாளர் நகர் ஓம் சக்தி விநாயகர், வேல்முருகன்,  ஓம்சக்தி மாரியம்மன் திருக்கோயில்களில் பௌர்ணமி மற்றும் மாரியம்மன் திருவிழாவையொட்டி,  கூழ் ஊற்றுதல், பொங்கலிடுதல்  நிகழ்வுகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
இந்தக் கோயில்களில் பௌர்ணமி மற்றும் மாரியம்மன் திருவிழாவையொட்டி,  ஓம்சக்தி விநாயகர்,  வள்ளி தெய்வானை, வேல்முருகன் சுவாமிக்கு  கணபதி ஹோமம்,  சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் திங்கள்கிழமை விழா தொடங்கியது. தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை கரக அழைப்பு,  கூழ் ஊற்றுதல், பொங்கலிடுதல் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன.  இதில் தருமபுரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.  
 மே 15-ஆம் தேதி (புதன்கிழமை)  மா விளக்கு எடுத்தல்,  தாரை தப்பட்டை வாணவேடிக்கை,  அம்மன் திருவீதி உலா ஆகிய நிகழ்வுகளும், மே 18-ஆம் தேதி வேல்முருகன் கோயிலிருந்து பால் குடம் ஊர்வலம்,  வள்ளி- தெய்வானை,  வேல்முருகனுக்கு பாலாபிஷேகம், செங்குந்தர் திருமண மண்டபத்தில் பிற்பகல் 1.30 மணியளவில் அன்னதானம், இரவு 9 மணிக்கு வள்ளி- தெய்வானை, வேல்முருகன் திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது.  19-ஆம் தேதி வள்ளி - தெய்வானை, வேல்முருகன் திருவீதி உலாவும் நடைபெறுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com