இலவச கண் பரிசோதனை முகாம்
By DIN | Published On : 26th May 2019 05:07 AM | Last Updated : 26th May 2019 05:07 AM | அ+அ அ- |

மொரப்பூரில் இலவச கண் பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை (மே 26) நடைபெறுகிறது.
கம்பைநல்லூர் ஸ்ரீராம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, தருமபுரி மாவட்ட பார்வையிழப்பு தடுப்புச் சங்கம், பண்ணந்தூர் அரிமா சங்கம், கோவை சங்கரா கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்தும் இந்த முகாமை அரிமா சங்க நிர்வாகி பி.என்.முருகேசன் தொடக்கிவைக்கிறார்.
கண் பரிசோதனை, கண் அறுவைச் சிகிச்சை உள்ளிட்ட மருத்துவப் பரிசோதனைகளை இலவசமாக கோவை சங்கரா மருத்துவமனையின் மருத்துவர் குழுவினர் மேற்கொள்கின்றனர். மொரப்பூரில் ராசலம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் (மொரப்பூர் ரயில்வே மேம்பாலம் அருகில்) காலை 8 முதல் மதியம் 1 மணி வரையிலும் இந்த முகாம் நடைபெறுகிறது.