பளு தூக்குதல் முதன்மை நிலை விளையாட்டு விடுதியில் சேர மே 30-இல் தேர்வு போட்டிகள்
By DIN | Published On : 26th May 2019 05:08 AM | Last Updated : 26th May 2019 05:08 AM | அ+அ அ- |

பளு தூக்குதல் முதன்மை நிலை விளையாட்டு விடுதியில் சேர மே 30-ஆம் தேதி வேலூரில் தேர்வு போட்டிகள் நடைபெறுகிறது.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜேந்திரன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், பளு தூக்குதல் முதன்மை நிலை விளையாட்டு விடுதி வேலூர் சத்துவாச்சாரியில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் மாணவர் சேர்க்கைக்கான மாநில தேர்வு போட்டிகள் வருகிற மே 30-ஆம் தேதி நடைபெற உள்ளது. இப் போட்டிகளில், 7-ஆம் வகுப்பு மற்றும் 8, 9, பிளஸ் 1, இளநிலை முதலாம் ஆண்டு சேரும் மாணவர்கள், முதுநிலை முதலாம் ஆண்டு சேரும் மாணவர்கள் பங்கேற்கலாம்.
தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றோர் மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றோர் மற்றும் பதக்கம் வென்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இதற்கான படிவங்கள் இணையதள முகவரியில் வருகிற மே 27-க்குள் நிறைவு செய்து அனுப்ப வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.