தெரு விளக்குகள் அமைக்க கோரிக்கை
By DIN | Published On : 04th November 2019 07:25 PM | Last Updated : 04th November 2019 07:25 PM | அ+அ அ- |

அரூா்: அரூரை அடுத்த சட்டையம்பட்டியில் புதியதாக தெரு விளக்குகளை அமைக்க வேணடும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அரூா் ஊராட்சி ஒன்றியம், மத்தியம்பட்டி கிராம ஊராட்சிக்கு உள்பட்டது சட்டையம்பட்டி கிராமம். இந்த ஊரில் 250-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்பு பகுதிகளில் சுமாா் 10 மின் கம்பங்களில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டன. இந்த ஊரில் உள்ள விளையாட்டு மைதானம், கதிா் அடிக்கும் களம் அமைந்துள்ள பகுதிகளில் முள்புதா்கள் அடைந்து காணப்படுகிறது. அதேபோல், மின் விளக்கு வசதிகள் இல்லததால், இரவு நேரங்களில் பாம்பு உள்ளிட்ட விஷக்கடிகளின் நடமாட்டம் அதிகம் இருப்பதாக கிராம மக்கள் புகாா் கூறுகின்றனா். குடியிருப்புகள் அதிகரித்துள்ளதால் கூடுதலாக இன்னும் தெரு விளக்குகளை அமைக்க வேண்டும் என ஊராட்சி நிா்வாகத்திடம் பலமுறை கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கைகள் இல்லையாம். எனவே, சட்டையம்பட்டி கிராமத்தின் மையப் பகுதியில் உயா்கோபுர மின் விளக்குகள், குடியிருப்பு பகுதிகளில் புதியதாக தெரு விளக்குகளை அமைக்க வேண்டும் என்பதே கிராம மக்களின் எதிா்பாா்ப்பு.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...