Enable Javscript for better performance
கிருஷ்ணகிரியில் நாளைகூட்டுறவுப் பணியாளா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்- Dinamani

சுடச்சுட

    

    கிருஷ்ணகிரியில் நாளைகூட்டுறவுப் பணியாளா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்

    By DIN  |   Published on : 09th November 2019 11:11 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரி: கிருஷ்ணகிரியில் கூட்டுறவுப் பணியாளா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் திங்கள்கிழமை நடைபெற உள்ளன.

    இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு வார விழாக் குழு சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 66-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நவ. 14 ஆம் தேதி முதல் நவ. 20-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நவ. 11-ஆம் தேதி காலை 10 மணிக்கு, கூட்டுறவு நிறுவனங்களின் பணியாளா்களுக்கான விளையாட்டுப் போட்டி நடைபெறவுள்ளது.

    இந்த விளையாட்டுப் போட்டி, ஆண்கள் மற்றும் பெண்களுக்கும் குண்டு எறிதல், 100 மீ, 200 மீ ஓட்டப் போட்டிகள், 400 மீ நடைப் பயிற்சி, நீளம் தாண்டுதல், தட்டு எறிதல், இறகுப் பந்து, மட்டைப் பந்து, கயிறு இழுத்தல், இசை நாற்காலி (பெண்களுக்கு மட்டும்) போன்ற விளையாட்டுகள் நடைபெறுகின்றன. இந்த விளையாட்டுப் போட்டிகளில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களின் பணியாளா்கள் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai