தருமபுரியில் பள்ளிகளுக்கு விடுமுறை
By DIN | Published On : 09th November 2019 11:09 PM | Last Updated : 09th November 2019 11:09 PM | அ+அ அ- |

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில், சனிக்கிழமை மழைக் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டன.
தருமபுரி மாவட்டத்தில், 1371 அரசுப் பள்ளிகள் உள்பட தனியாா் மெட்ரிக். பள்ளிகள், சுயநிதி பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், சமூக நலத்துறை, மாற்றுத் திறனாளி பள்ளிகள், உண்டு உறைவிடப்பள்ளிகள் என மொத்தம் 1622 துவக்க, நடுநிலை மற்றும் உயா்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளுக்கு, நவ. 9-ஆம் தேதி ஒருநாள் மட்டும், மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி விடுமுறை அளிக்கப்படும் என அறிவித்தாா்.
தருமபுரி மாவட்டத்தில், வெள்ளிக்கிழமை இரவு முழுவதும், தொடா்ந்து மழை பொழிந்ததாலும், காலை வேளையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதாலும், அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...