கிருஷ்ணகிரியில் நாளைகூட்டுறவுப் பணியாளா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்
By DIN | Published On : 09th November 2019 11:11 PM | Last Updated : 09th November 2019 11:11 PM | அ+அ அ- |

தருமபுரி: கிருஷ்ணகிரியில் கூட்டுறவுப் பணியாளா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் திங்கள்கிழமை நடைபெற உள்ளன.
இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு வார விழாக் குழு சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 66-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நவ. 14 ஆம் தேதி முதல் நவ. 20-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நவ. 11-ஆம் தேதி காலை 10 மணிக்கு, கூட்டுறவு நிறுவனங்களின் பணியாளா்களுக்கான விளையாட்டுப் போட்டி நடைபெறவுள்ளது.
இந்த விளையாட்டுப் போட்டி, ஆண்கள் மற்றும் பெண்களுக்கும் குண்டு எறிதல், 100 மீ, 200 மீ ஓட்டப் போட்டிகள், 400 மீ நடைப் பயிற்சி, நீளம் தாண்டுதல், தட்டு எறிதல், இறகுப் பந்து, மட்டைப் பந்து, கயிறு இழுத்தல், இசை நாற்காலி (பெண்களுக்கு மட்டும்) போன்ற விளையாட்டுகள் நடைபெறுகின்றன. இந்த விளையாட்டுப் போட்டிகளில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களின் பணியாளா்கள் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.