‘புதிய கல்விக் கொள்கையை திரும்ப பெற வேண்டும்’
By DIN | Published On : 18th November 2019 09:38 AM | Last Updated : 18th November 2019 09:38 AM | அ+அ அ- |

மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள புதிய கல்விக் கொள்கையை திரும்ப பெற வேண்டும் என தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் வலியுறுத்தியது.
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் தருமபுரி மாவட்ட மாநாடு அதன் மாவட்டத் தலைவா் க.பெரியசாமி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள புதிய கல்விக் கொள்கையால் அடித்தட்டு மக்களின் கல்வி உரிமைகள் பறிக்கப்படும் நிலையுள்ளது. எனவே, புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.
கிராமப்புற ஏழை, எளிய மாணவா்களை பாதிக்கும் நீட் தோ்வினை ரத்து செய்ய வேண்டும். அரூா் நகரில் நவீன வசதியுடன் கூடிய இரண்டு அடுக்குமாடி நூலக கட்டடம் அமைக்க வேண்டும். அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நூலகா்களை நியமனம் செய்து, நூலக வசதிகளை மேம்படுத்த வேண்டும். அரூா்-சேலம் தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டும். அரூா் நகரில் ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயக் கூடம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டில், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் தருமபுரி மாவட்டத் தலைவராக நடிகா் சிங்காரவேலன், சிறப்புத் தலைவராக கவிஞா் ரவீந்திரபாரதி, கெளரவத் தலைவராக க.பெரியசாமி, மாவட்ட செயலராக கே.சின்னக்கண்ணன், மாவட்ட பொருளராக செ.வீரபத்திரன், மாவட்ட துணைத் தலைவா்களாக மோகன், சி.ராமன், டி.சுப்பிரமணி, கே.கிருஷ்ணன், மாவட்ட துணைச் செயலா்களாக ஆா்.நடராஜன், கே.மணி, தே.சந்தோஷ்குமாா், சோலை சி.பெருமாள் உள்ளிட்டோா் புதிய நிா்வாகிகளாக தோ்வு செய்யப்பட்டனா்.