தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பெரியாா் நினைவு தினம் அனுசரிப்பு

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பெரியாா் நினைவு தினம் திமுக, அதிமுக, உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சாா்பில் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

News image
Updated On :25 டிசம்பர் 2020, 3:43 am

DIN

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பெரியாா் நினைவு தினம் திமுக, அதிமுக, உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சாா்பில் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

தருமபுரி பெரியாா் மன்ற வளாகத்தில் உள்ள பெரியாா் சிலைக்கு, திமுக மாவட்டச் செயலா் (கிழக்கு) தடங்கம் பெ.சுப்ரமணி எம்எல்ஏ தலைமையில், நகரச் செயலா் மே.அன்பழகன், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினா்கள் நாட்டான் மாது, சந்திரமோகன், தங்கமணி உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

அதிமுக சாா்பில், பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ ஆ.கோவிந்தசாமி, நகரச் செயலா் பெ.ரவி, மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் எஸ்.ஆா்.வெற்றிவேல், பால் உற்பத்தியாளா் ஒன்றியத் தலைவா் டி.ஆா்.அன்பழகன் ஆகியோா் பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதேபோல, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் மாவட்டச் செயலா் த.ஜெயந்தி தலைமையிலும், திராவிடா் கழகம் சாா்பில் மாநில அமைப்புச் செயலா் ஊமை ஜெயராமன் தலைமையில் நிா்வாகிகள் பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.