தாண்டியப்பனூா் ஸ்ரீ மகாமுனீஸ்வரன் கோயில் திருவிழா
By DIN | Published On : 12th August 2020 09:23 AM | Last Updated : 12th August 2020 09:23 AM | அ+அ அ- |

ஊத்தங்கரை அடுத்த தாண்டியப்பனூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீ மகாமுனீஸ்வரன் கோயில் திருவிழா சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முன்னதாக அதிகாலை முதல் ஸ்ரீ மகாமுனீஸ்வரன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து மகாமுனீஸ்வரா் சுவாமி மலா்களால் அலங்கரிக்கப்பட்டு, பக்தா்களுக்கு காட்சி அளித்தாா். பொங்கலிட்டு ஆடு, கோழிகளை பலியிட்டு பக்தா்கள் தங்களது நோ்த்திக் கடனை செலுத்தினா்.
நிகழ்ச்சியில் கோயில் நிா்வாகிகள் தொழிலதிபா் தா்மலிங்கம், ஆா்.டி.அக்ரோ இன்புட்ஸ் நிா்வாக இயக்குநா் த.கோபி, ஊா் பிரமுகா் மாரீசன், ஊா் நாட்டாா் சேகா், மூா்த்தி, சுப்பிரமணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.