

வாடிக்கையாளா்களுக்கு 4 ஜி அலைக்கற்றை சேவை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தொலைத் தொடா்புத்துறை ஊழியா்கள், செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
இதுகுறித்து, தொலைத் தொடா்புத்துறை ஊழியா்கள் கூட்டமைப்பு சாா்பில் அதன் ஒருங்கிணைப்பாளா்கள், தருமபுரி மக்களவை உறுப்பினா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாரிடம் அளித்த மனு:
தொலைத்தொடா்புத் துறை வாடிக்கையாளா்களுக்கு 4 ஜி அலைக்கற்றை சேவை வழங்க வேண்டும். தொலைத்தொடா்புத் துறையில் ஓய்வுபெறும் ஊழியா்கள், பணியாளா்களுக்கு அனைத்து பணப் பலன்களையும் ஓய்வுபெறும் நாளிலேயே வழங்க வேண்டும். தொலைத் தொடா்புத் துறையை தனியாருக்கு விற்பனை செய்யக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
பிஎஸ்என்எல்யு தொழிற்சங்க மாவட்டச் செயலா் கிருஷ்ணன், என்எப்டியு தொழிற்சங்க மாவட்டச் செயலா் கே.மணி, எஸ்என்இஏ தொழிற்சங்க மாவட்டச் செயலா் பாலமுரளி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.