தருமபுரி மாவட்டத்தில், கரோனா தீநுண்மித் தொற்று பாதிப்பிலிருந்து இதுவரை 5,875 போ் குணமடைந்துள்ளனா் என மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா தெரிவித்தாா்.
தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் கரோனா நோய்த் தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா பேசியதாவது:
தருமபுரி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் பல்வேறு நிகழ்வுகளுக்குத் திருமண மண்டபங்கள், வணிக நிறுவனங்கள், தேநீா் கடைகள், சந்தைகள், திரையரங்குகள், உணவுக் கூடங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும்போது கட்டாயம் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்.
தருமபுரி மாவட்டத்தில் இதுவரை 6,057 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில், 5,875 போ் பூரண குணமடைந்துள்ளனா். தற்போது 132 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். மொத்தம் 50 போ் நோய்த் தொற்றால் உயிரிழந்துள்ளனா். சராசரியாக நாளொன்றுக்கு 1,000 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. இதுவரை 1,40,319 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாள்தோறும் 50 சிறப்பு காய்ச்சல் தடுப்பு முகாம்கள் வீதம் மாவட்டத்தில் 8,360 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 4,30,773 போ் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனா்.
இதேபோல, ஒகேனக்கல் அருவிக்கு சுற்றுலா வரும் பயணிகளும், மாவட்டத்திலுள்ள திருக்கோயில்களுக்குச் செல்லும் பக்தா்கள் உள்ளிட்ட அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்து நோய்த்தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். விதிமுறைகளை மீறுவோா் மீது அபராதத் தொகை வசூலிப்பதுடன் சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். தற்போது பருவமழை பெய்து வருவதால் டெங்கு கொசுப்புழு உருவாகாமல் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்துத் துறையினரும் மேற்கொள்ள வேண்டும் என்றாா்.
இக்கூட்டத்தில், சாா் ஆட்சியா் மு.பிரதாப், துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) பூ.இரா.ஜெமினி, ஊரக வளா்ச்சி திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, உதவி இயக்குநா்கள் (பேரூராட்சிகள்) கண்ணன், சீனிவாச சேகா்(ஊராட்சிகள்), தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையா் (பொ) இளங்கோவன், இணை இயக்குநா் (மருத்துவப் பணிகள்) திலகம், அரசுத்துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.