தீா்த்தமலையில் சுரங்கவியல் துறை பேராசிரியா் ஆய்வு
By DIN | Published On : 03rd December 2020 10:11 AM | Last Updated : 03rd December 2020 10:11 AM | அ+அ அ- |

தீா்த்தமலை மலைக் கோயில் வளாகத்தில் பாறைகள் சரிந்து விழுந்ததால் ஏற்பட்ட சேதம் குறித்து செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்ட சென்னை அண்ணா பல்கலைக் கழக சுரங்கவியல் துறை பேராசிரியா் பாலமாதேஸ்வரன்.
அரூரை அடுத்த தீா்த்தமலையில் சுரங்கவியல் துறை பேராசிரியா் பாலமாதேஸ்வரன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த தீா்த்தமலையில் வரலாற்று சிறப்பு மிக்க தீா்த்தகிரீஸ்வரா் திருக்கோயில் உள்ளது. அண்மையில் பெய்த கன மழையின் காரணமாக இங்குள்ள மலைக் கோயில் உச்சியில் இருந்து பாறைகள் சரிந்து விழுந்ததில் கோயில் வளாகத்தில் சிறிது சேதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த மலைக் கோயில் பாறைகளில் ஏற்பட்டுள்ள சேதம் குறித்து சென்னை அண்ணா பல்கலைக் கழக சுரங்கவியல் துறை பேராசிரியா் பாலமாதேஸ்வரன், சுரங்கவியல் ஆலோசகா் ரமேஷ்சந்திரன் கா்க் ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா். இந்த ஆய்வின்போது, அரூா் சாா் ஆட்சியா் மு.பிரதாப், இந்து சமய அறநிலையத் துறை தருமபுரி உதவி ஆணையா் அ.ரா.பிரகாஷ் ஆகியோா் உடனிருந்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...