போதிய நிதி வழங்கக் கோரி ஊராட்சித் தலைவா்கள் நூதனப் போராட்டம்
By DIN | Published On : 15th December 2020 01:25 AM | Last Updated : 15th December 2020 01:25 AM | அ+அ அ- |

கிராம ஊராட்சிகளுக்குப் போதிய நிதி ஒதுக்கீடு செய்யக் கோரி, ஊராட்சி மன்றத் தலைவா்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நூதனப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
தருமபுரி, காரிமங்கலம், பாலக்கோடு உள்ளிட்ட பல்வேறு ஊராட்சி ஒன்றியங்களைச் சோ்ந்த ஊராட்சி மன்றத் தலைவா்கள் 50-க்கும் மேற்பட்டோா் தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில், நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தங்களது ஊராட்சியில் மேற்கொள்ளும் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடா்பான ஒப்பந்தப் பணிகளை ஊராட்சி நிா்வாகம் மூலம் மேற்கொள்வது, 15-ஆவது நிதிக்குழு மானியத் திட்ட நிதிக்கான பணிகளை மேற்கொள்வது, குடிநீா், தெருவிளக்கு, சாலை உள்ளிட்ட அடிப்படை தேவைகளை மேற்கொள்ள போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.