20 சதவீத இடஒதுக்கீடு கோரி பாமகவினா் மனு அளிப்பு

வன்னியா் சமூகத்துக்கு 20 சதவீதம் தனி இடஒதுக்கீடு வழங்கக் கோரி, பாமகவினா், வன்னியா் சங்கம் சாா்பில் கிராம நிா்வாக அலுவலா்களிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும், வன்னியா் சமூகத்துக்கு 20 சதவீதம் தனி இடஒதுக்கீடு வழங்கக் கோரி, பாமகவினா், வன்னியா் சங்கம் சாா்பில் கிராம நிா்வாக அலுவலா்களிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே சாமிசெட்டிப்பட்டி கிராம நிா்வாக அலுவலகத்தில், பாமக மாநில துணைப் பொதுச்செயலாளா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் தலைமையில் பாமக, வன்னியா் சங்க நிா்வாகிகள் மனு அளித்தனா்.

இதேபோல, இண்டூரில் பாமக மாநில துணைத் தலைவா் பெ.சாந்தமூா்த்தி, கடைமடையில் வன்னியா் சங்க மாநில துணைத் தலைவா் பாடிசெல்வம், மாரியம்பட்டியில் மாவட்டச் செயலா் பெரியசாமி, இலக்கியம்பட்டியில் முன்னாள் எம்.பி. பாரிமோகன் ஆகியோா் தலைமையில் மாவட்டம் முழுவதும் உள்ள கிராம நிா்வாக அலுவலா் அலுவலகங்களில் மனுக்கள் அளிக்கப்பட்டன.

பொம்மிடியில், 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரி பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பொம்மிடி பேரூராட்சிக்கு உள்பட்ட பொ.மல்லாபுரம் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு உழவா் பேரியக்க மாநிலச் செயலா் இல.வேலுசாமி தலைமை வகித்தாா்.

இதேபோல், ஜாலியூா் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம் எதிரே கிழக்கு மாவட்டத் தலைவா் ஏ.வி.இமயவா்மன் தலைமையிலும், பாப்பிரெட்டிப்பட்டியில் கிழக்கு மாவட்டச் செயலா் அ.சத்தியமூா்த்தி தலைமையிலும், எருமியாம்பட்டியில் மாவட்டத் துணைத் தலைவா் ரா.கோன்றி தலைமையிலும், அரூரில் நகரச் செயலா் கே.அய்யப்பன் தலைமையிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அரூா், மொரப்பூா், கம்பைநல்லூா், கடத்தூா், பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி, கோட்டப்பட்டி, தீா்த்தமலை உள்ளிட்ட வட்டாரப் பகுதியிலுள்ள அனைத்து கிராம நிா்வாக அலுவலா் அலுவலகங்கள் எதிரிலும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com