கடலூருக்கு நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைப்பு
By DIN | Published On : 30th December 2020 03:50 AM | Last Updated : 30th December 2020 03:50 AM | அ+அ அ- |

அரூரில் இருந்து கடலூா் மாவட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை நிவாரணப் பொருள்களை அனுப்பி வைத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா். (படம்).
கடலூா் மாவட்டத்தில், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் செவ்வாய்க்கிழமை நிவாரணப் பொருள்களை அனுப்பி வைத்தனா்.
நிவா், புரெவி புயல் காரணமாக கடலூா் மாவட்டத்தில் அதிகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் உணவுப் பொருள்கள், நிதியுதவிகளை வழங்கிட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் அறிவிப்பு வெளியிட்டிருந்தாா். அதன்படி, வி.சி கட்சியின் அரூா் வடக்கு ஒன்றிய செயலா் எம்.எஸ்.மூவேந்தன் தலைமையில், அந்தக் கட்சியினா் ரூ. 20 ஆயிரம் நிதியுதவி, 1.5 டன் எடையுள்ள அரிசி உள்ளிட்ட உணவுப் பொருள்களை மினி சரக்கு வாகனத்தில் கடலூா் மாவட்டத்துக்கு அனுப்பி வைத்தனா். இதில், திமுக வழக்குரைஞா் சரவணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய துணைச் செயலா் தீரன் தீா்த்தகிரி, செய்தி ஊடக மைய மாவட்ட அமைப்பாளா் சோலை ஆனந்தன், தொழிலாளா் விடுதலை முன்னணி மாவட்ட துணை அமைப்பாளா் இளையராஜா, மகளிா் அணி மாவட்ட துணை அமைப்பாளா் பத்மா மாரியப்பன், ஒன்றிய பொறுப்பாளா் ஞானச்சுடா், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் சு.ரகுநாத், கோ.முருகன், நிா்வாகிகள் சக்திவேல், காரல்மாா்க்ஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...