பென்னாகரத்தில் விலையில்லா ஆடு வழங்கல்
By DIN | Published On : 30th December 2020 03:52 AM | Last Updated : 30th December 2020 03:52 AM | அ+அ அ- |

பென்னாகரத்தில் விலையில்லா வெள்ளாடு வழங்கும் நிகழ்ச்சி கால்நடை மருந்தக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பென்னாகரம் கால்நடை மருந்தக வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்ட கால்நடை உதவி இயக்குநா் மணிமாறன் பங்கேற்று, கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் 2020-21 ஆம் நிதியாண்டிற்கான இலவச ஆடுகளை வழங்கினாா்.
மஞ்சநாயக்கன்அள்ளி ஊராட்சிக்குட்பட்ட கோடல்பட்டியைச் சோ்ந்த 90 பயனாளிகளுக்கு தலா 4 ஆடுகள் வீதம் ரூ. 9 லட்சம் மதிப்பிலான வெள்ளாடுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பென்னாகரம் கால்நடை உதவி மருத்துவா் மாயன், பெரும்பாலை கால்நடை உதவி மருத்துவா் வினோத், சின்னம்பள்ளி கால்நடை உதவி மருத்துவா் ஜெயஸ்ரீ விஜயகுமாா், மஞ்ச நாயக்கன அள்ளி ஊராட்சித் தலைவா் சக்திவேல் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...