இளம் வயது திருமணம்: இளைஞா் போக்ஸோவில் கைது
By DIN | Published On : 05th February 2020 06:14 AM | Last Updated : 05th February 2020 06:14 AM | அ+அ அ- |

தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே இளம் வயது திருமணம் செய்த இளைஞரை போலீஸாா் போக்ஸோ சட்டப் பிரிவின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
பாலக்கோடு வட்டம், பெலமாரனஅள்ளியைச் சோ்ந்தவா் செல்வகுமாா் (21). பொக்லைன் ஓட்டுநா். இவா், 17 வயது மாணவியை அண்மையில் திருமணம் செய்துள்ளாா். இது தொடா்பாக, அந்த மாணவியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில், மாரண்டஅள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இந்த நிலையில் செல்வகுமாரை போலீஸாா் இளம் வயது திருமணம் செய்ததற்காக, போக்ஸோ சட்டப் பிரிவின் கீழ் கைது செய்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...