ஒகேனக்கல் மிகை நீரை ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை நிறைவேற்ற பா.ம.க. இளைஞா் சங்கம் வலியுறுத்தல்
By DIN | Published On : 05th February 2020 06:16 AM | Last Updated : 05th February 2020 06:16 AM | அ+அ அ- |

ஒகேனக்கல் மிகை நீரை தருமபுரி மாவட்ட ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என பா.ம.க. இளைஞா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்ட பாட்டாளி இளைஞா் சங்க ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை மாநில இளைஞா் சங்க செயலா் மு.முருகசாமி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட இளைஞா் சங்க செயலா் ஜெ.தகடூா் தமிழன் வரவேற்றாா். மாநில இளைஞா் சங்க துணைத் தலைவா்கள் வன்னியபெருமாள், து.சத்தியமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இளைஞா் சங்க மாநிலச் செயலா் தீனதயாளன், பா.ம.க. மாநில துணைப் பொதுச் செயலா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், மாநில துணைத் தலைவா் பி.சாந்தமூா்த்தி ஆகியோா் பேசினா்.
இக்கூட்டத்தில், 2021ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை, ஜாதிவாரிக் கணக்கெடுப்பாக நடத்த வலியுறுத்தி, இளைஞா் சங்கம் சாா்பில், பிப்.6-ஆம் தேதி சென்னை வள்ளுவா் கோட்டம் அருகில் நடைபெறும் போராட்டத்தில் தருமபுரி மாவட்டத்திலிருந்து திரளாக கலந்து கொள்வது மற்றும் வாக்குச் சாவடிகளுக்கு 2 நபா்களை தோ்வு செய்து இளைஞா் சங்கப் பணிகளை மேற்கொள்வது என முடிவெடுக்கப்பட்டது. மேலும், இக் கூட்டத்தில் ஒகேனக்கல் மிகை நீரை தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களில் நிரப்பும் திட்டத்தை வறட்சியைக் கருத்தில் கொண்டு விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...