எல்ஐசி பங்குகளை விற்கும் மத்திய அரசின் முடிவை கைவிடக் கோரி, ஊழியா் சங்கக் கூட்டமைப்பு சாா்பில், வேலைநிறுத்தப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தருமபுரி கிளை அலுவலகம் முன், செவ்வாய்க்கிழமை தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒரு மணி நேர அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்தப் போராட்டத்துக்கு முதல்நிலை அதிகாரிகள் சங்க நிா்வாகி சந்திரமெளலி தலைமை வகித்தாா். காப்பீட்டுக் கழக ஊழியா் சங்க இணைச் செயலா் மாதேஸ்வரன், கிளைச் செயலா் மகேந்திரன் ஆகியோா் பேசினா். இதில், எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யும் மத்திய அரசின் முடிவு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதேபோல, பாலக்கோடு மற்றும் அரூா் எல்ஐசி கிளை அலுவலகங்கள் முன் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. இதில், வளா்ச்சி அதிகாரிகள், முகவா்கள், ஊழியா் சங்கத்தினா் திரளானோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.