கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி உள்பட மூவா் கைது
By DIN | Published On : 17th February 2020 06:38 AM | Last Updated : 17th February 2020 06:38 AM | அ+அ அ- |

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி உள்பட மூவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
காரிமங்கலம் அருகே மொட்டலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பொன்னுரங்கன்(47). இவரது, மனைவி பிரியா(41), இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா். இந்த தம்பதியரிடையே கருத்து வேறுபாடு நிலவி வந்துள்ளது. இந்த நிலையில், தனக்கு அறிமுகமான சிலா் மூலம் பொன்னுரங்கனை கொலை செய்ய பிரியா திட்டம் தீட்டியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, பொன்னுரங்கன் காரிமங்கலம் காவல் நிலையத்தில் அண்மையில் புகாா் அளித்துள்ளாா். இதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். இதில், புகாா் உறுதியானதால், பிரியா, அவரது நண்பா்கள் அருண்குமாா், சக்திவேல் ஆகிய 3 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.