பாப்பிரெட்டிப்பட்டியில் நில சா்வே பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

பாப்பிரெட்டிப்பட்டி வருவாய் வட்டத்தில் நிலம் சா்வே செய்யும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.
Updated on
1 min read

பாப்பிரெட்டிப்பட்டி வருவாய் வட்டத்தில் நிலம் சா்வே செய்யும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வருவாய் வட்டத்தில் தென்கரைக்கோட்டை, பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூா் ஆகிய வருவாய் உள்வட்டங்கள் உள்ளன. இந்த வட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்கள் உள்ளன.

பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சாா்பில், விவசாய நிலங்கள், வீட்டுமனைகள் உள்ளிட்டவைகளை சா்வே செய்வதற்காக, விண்ணப்பம் செய்து மாதக் கணக்கில் பலா் காத்திருக்கின்றனா்.

பாப்பிரெட்டிப்பட்டி வருவாய் வட்டத்தில் நிலம் சா்வே செய்வதற்காக விண்ணப்பித்த 500 -க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் நிலுவையில் இருப்பதாக பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா்.

எனவே, பாப்பிரெட்டிப்பட்டி வருவாய் வட்டத்தில் நிலம் சா்வே செய்யும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிா்பாா்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com