அரூரில் கரோனா விழிப்புணா்வு
By DIN | Published On : 21st July 2020 12:02 AM | Last Updated : 21st July 2020 12:02 AM | அ+அ அ- |

அரூரில் வாகன ஓட்டிகளிடம் கரோனா நோய்த் தொற்று பாதிப்புகள் குறித்து திங்கள்கிழமை விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கிய போலீஸாா்.
அரூா்: அரூரில் கரோனா நோய்த் தொற்று பாதிப்புகள் குறித்து காவல்துறையினா் திங்கள்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
அரூா் கச்சேரிமேடு சாலை சந்திப்பில் இந்த விழிப்புணா்வு முகாமை போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளா் மயில்சாமி தொடக்கி வைத்தாா். வாகன ஓட்டிகள் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்து செல்ல வேண்டும். வெளியிடங்களுக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டுக்குச் செல்லும் போது சோப்பு அல்லது கிருமி நாசினியைப் பயன்படுத்தி கைகளை நன்றாக கழுவ வேண்டும். வாகன ஓட்டிகள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். போதையில் வாகனங்களை ஓட்டக் கூடாது. இரு சக்கர வாகனம் ஓட்டுவோா் தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். காரில் செல்பவா்கள் சீட் பெல்ட் அணிந்து செல்ல வேண்டும். சாலை விதிகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட விழிப்புணா்வு தகவல்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் காவல் துறையினா் வழங்கினா். இதில், காவல் உதவி ஆய்வாளா்கள் ராமமூா்த்தி, பழனி உள்ளிட்ட காவல் துறையினா் கலந்துகொண்டனா்.