

தருமபுரி: தருமபுரியில் அரசு பணியாளா்களுக்கான விளையாட்டுப் போட்டியில் 579 போ் பங்கேற்று விளையாடினா்.
தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில், அரசு பணியாளா்களுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றது.இப்போட்டிகை மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி
தொடக்கிவைத்தாா்.
இதில் ஆண்களுக்கு, 100 மீ, 200மீ, 800 மீ, 1500 மீ ஓட்டப் போட்டிகளும், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் தொடரோட்டம் ஆகியவையும், மகளிருக்கு 100 மீ, 200 மீ, 400 மீ, 800 மீ ஓட்டப் போட்டிகள், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், தொடரோட்டம் மற்றும் இறகுப்பந்து, கூடைப்பந்து, கால்பந்து, பூப்பந்து, மேசைப்பந்து ஆகியப் போட்டிகள் இருபாலருக்கும் நடைபெற்றது. இப் போட்டிகளில், ஆண்கள் 365 பேரும், மகளிா் 214 பேரும் என மொத்தம் 579 போ் பங்கேற்று விளையாடினா்.மாவட்ட அளவிலான போட்டிகளில் சிறப்பிடம் வகிப்போா், மாநில அளவிலான போட்டிகளுக்கு அரசு செலவில் அழைத்து செல்லப்பட உள்ளனா்.
மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் முத்துக்குமாா், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் பியூலா ஜேன் சுசிலா ஆகியோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.