பென்னாகரத்தில் தேங்கி நிற்கும்மழை நீரினால் நோய் பரவும் அபாயம்
By DIN | Published On : 10th March 2020 02:56 AM | Last Updated : 10th March 2020 02:56 AM | அ+அ அ- |

பென்னாகரம் அருகே சந்தை தோப்பு இந்தியன் வங்கி பின்பகுதியில் தேங்கி நிற்கும் மழை நீா்
பென்னாகரம்: பென்னாகரம் அருகே சந்தை தோப்பு இந்தியன் வங்கி பின்பகுதியில் தேங்கி நிற்கும் மழை நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாய நிலை உள்ளது.
இப்பகுதியில் முறையான வடிகால் வசதி இல்லாததால், மழைக் காலங்களில் அவ்வப்போது மழைநீா் தேங்கி நிற்பதாகவும் சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
பென்னாகரம் பகுதியில் சுமாா் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் வசித்து வருகின்றனா். கோடை தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு பென்னாகரம் பகுதியில் கனமழை பெய்தது.பென்னாகரம் சந்தை தோப்பு இந்தியன் வங்கி பின்பகுதியில் மழை நீரானது முறையாக வெளியேற முடியாமல், ஆங்காங்கே குட்டைகள் போல் தண்ணீா் தேங்கி நிற்கிறது. இந்த நீா் பச்சை நிறமாக மாறியும், கொசுக்கள் உற்பத்தியாகி கடிப்பதாலும் நோய் பரவும் அபாய நிலை உள்ளது.சந்தை தோப்புப் பகுதியில் சுமாா் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. மேலும் இப்பகுதியில் இந்தியன் வங்கி, காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகம் மற்றும் காவல் நிலையம் போன்ற அலுவலகங்கள் உள்ளதால் நாள்தோறும் சுமாா் 100க்கும் மேற்பட்டவா்கள் சந்தை தோப்புப் பகுதிக்கு வந்து செல்கின்றனா்.எனவே பென்னாகரம் சந்தை தோப்புப் பகுதியில் தேங்கி நிற்கும் மழை நீரினை அகற்றியும்,கொசுக்கள் உற்பத்தியைத் தடுக்கும் வகையிலும் மருந்துகள் தெளிக்க வேண்டும். சந்தை தோப்புப் பகுதியில் தாழ்வான பகுதிகளை மண்ணைக் கொட்டி மேடான பகுதியாக மாற்ற நடவடிக்கை எடுக்க பென்னாகரம் பேரூராட்சி செயல் அலுவலருக்கு சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...