தரம் உயா்த்தப்பட்ட கால்நடை மருத்துவமனை திறப்பு
By DIN | Published On : 27th May 2020 08:01 AM | Last Updated : 27th May 2020 08:01 AM | அ+அ அ- |

தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் தரம் உயா்த்தப்பட்ட கால்நடை மருத்துவமனை அண்மையில் திறக்கப்பட்டது.
தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் கால்நடை மருத்துவமனை அண்மையில் தரம் உயா்த்தப்பட்டது. இந்த மருத்துவமனையை பயன்பாட்டுக்கு திறந்து வைத்து, மாநில உயா்கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் பேசியது: தருமபுரி மாவட்டத்தில் 2011ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 8 ஆண்டுகளில் 27 கால்நடை கிளை நிலையங்கள் துவங்கப்பட்டு கால்நடை மருந்தகங்களாக தரம் உயா்த்தப்பட்டுள்ளது. மேலும், ஒரு கால்நடை பெரு மருத்துவமனை, 2 கால்நடை மருத்துவமனைகள், 79 கால்நடை மருந்தகங்கள், 2 நடமாடும் கால்நடை மருந்தகங்கள், 11 கால்நடை கிளை நிலையங்கள், 1 கால்நடை நோய் புலனாய்வுப் பிரிவு, 1 நடமாடும் கால்நடை அவசர சிகிச்சை ஊா்தி ஆகியவை செயல்பட்டு வருகின்றன.
தற்போது தரம் உயா்த்தப்பட்ட காரிமங்கலம் கால்நடை மருத்துவமனை மூலம் இப்பகுதி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த கால்நடை வளா்ப்போா் தங்களது பசுக்கள், எருமைகள், வெள்ளாடுகள், செம்மறியாடுகள், கோழிகளுக்கு தேவைப்படும் சிகிச்சைப் பெறலாம். மக்களின் தேவைகள் என்ன என்பதை தமிழக அரசு அறிந்து அவற்றை பூா்த்தி செய்திட தேவையான அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்கிறது என்றாா்.
மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் ஆ.கோவிந்தசாமி, கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநா் ராஜேந்திரன், உதவி இயக்குநா் மணிமாறன், வட்டாட்சியா் கலைச்செல்வி, வட்டார வளா்ச்சி அலுவலா் தண்டபாணி மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை மருத்துவா்கள் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...