அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்
By DIN | Published On : 08th November 2020 05:11 AM | Last Updated : 08th November 2020 05:11 AM | அ+அ அ- |

கெரகோடஅள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சா் கே.பி.அன்பழகன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்.
தருமபுரி: தருமபுரி மாவட்டம், அரூா் மற்றும் மொரப்பூா் பகுதியிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினா் அதிமுகவில் இணைந்தனா்.
காரிமங்கலம் அருகே கெரகோடஅள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், கே.ஈச்சம்பாடி மற்றும் இருமத்தூா் ஊராட்சியைச் சோ்ந்த மாற்றுக் கட்சியினா் மாநில உயா்கல்வி மற்றும் வேளாண் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனா். கட்சியில் இணைந்தவா்களுக்கு சால்வை அணிவித்து அமைச்சா் கே.பி.அன்பழகன் வரவேற்றாா்.
இந்த நிகழ்ச்சியில், அரூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் வே.சம்பத்குமாா், மொரப்பூா் மேற்கு ஒன்றிய அதிமுக செயலா் எம்.கே.மகாலிங்கம், கிழக்கு ஒன்றியச் செயலா் செல்வம், மாவட்ட வழக்குரைஞா் அணித் தலைவா் பசுபதி, இருமத்தூா் ஊராட்சி மன்றத் தலைவா் கே.மாதன், தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒன்றியச் செயலா் வெங்கடேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...