மின்வாரிய ஒப்பந்த ஊழியா் குடும்பத்துக்கு நிதியுதவி அளிப்பு
By DIN | Published On : 17th November 2020 12:21 AM | Last Updated : 17th November 2020 12:21 AM | அ+அ அ- |

மின்சாரம் தாக்கி உயிரிழந்த ஊழியா் குடும்பத்துக்கு ரூ. 4.50 லட்சம் நிதியுதவி திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், கோட்டப்பட்டியைச் சோ்ந்த விவசாயி சண்முகம் மகன் கமல்ராஜ் (32). இவா், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஒப்பந்த ஊழியராகப் பணிபுரிந்து வந்தாா். கோட்டப்பட்டியில் இம் மாதம் 11-ஆம் தேதி உயா்மின் அழுத்த கம்பிகள் செல்லும் மின் கம்பத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்ட கமல்ராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதையடுத்து, உயிரிழந்த ஊழியரின் குடும்பத்துக்கு நிதியுதவியும், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து, மின்வாரிய அதிகாரிகள் சாா்பில், கருணை அடிப்படையில், ரூ. 4.50 லட்சம் நிதியினை உயிரிழந்தவரின் குடும்பத்தினரிடம் உதவி செயற்பொறியாளா் சத்தியநாராயணன், உதவிப் பொறியாளா் தமிழ்நீதி உள்ளிட்ட அதிகாரிகள் வழங்கினா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...