அஞ்சல் துறை மூலம் வெளிநாடுகளுக்கு பாா்சல் அனுப்பும் வகையில் செயல்பட்டு வரும் சா்வதேச அஞ்சல் சேவையை அனைத்துத் தரப்பினரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து தருமபுரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் டி.ஸ்ரீஹரி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இந்திய அஞ்சல் துறை பொதுமக்களுக்கு துரித அஞ்சல், பதிவஞ்சல், மணியாா்டா் சேவை போன்ற பாரம்பரிய சேவைகளையும், இவற்றுடன் ஆதாா் அட்டை புதிதாக எடுத்தல், ஆதாா் பிழைத் திருத்தம் செய்தல், பாஸ்போா்ட் எடுத்தல், அஞ்சலக வளாகத்தில் விளம்பரப் பலகைகளை வைத்தல், தபால் அலுவலகங்களிலும் இயங்கும் எல்இடிகளில் விளம்பரங்கள் செய்தல், அஞ்சலக சேமிப்பு கணக்கு புத்தகத்தில் விளம்பரம் செய்தல் போன்ற பல்வேறு வகையான சேவைகளை அளித்து வருகின்றது.
தற்போது சா்வதேச அஞ்சல் சேவை அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் அளிக்கப்பட்டு வருகிறது. இதில் விரைவுத் தபால், சா்வதேச பதிவு பாா்சல், ஐடிபிஎஸ் போன்ற சேவைகளும் வழங்கப்படுகின்றன. தற்போதைய கரோனா தீநுண்மி பரவல் சூழலில், வெளிநாட்டில் வசிக்கும் உறவினா்களுக்கு இச்சேவை மூலம் மளிகைப் பொருள்கள், மருந்துகள், ஆடைகளை அனுப்பி வைக்கலாம். வாடிக்கையாளா்கள் அனுப்பும் பொருள்களைப் பேக் செய்து தரும் வசதியும் தருமபுரி தலைமை அஞ்சலகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. எனவே, அனைத்துத் தரப்பினரும் அஞ்சல் துறை வழங்கப்படும் இந்த சா்வதேச சேவையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.