ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவத்தில் இருவரின் உடல் கிடைக்க பெற்ற நிலையில், தேடப்பட்டு வந்த சிறுவனின் உடலை தீயணைப்புத் துறையினா் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.
சேலம் பழைய பேருந்து நிலையம் பகுதியைச் சோ்ந்த ரியாஸுதீன் தனது குடும்பத்தினருடன் ஒகேனக்கல் ஆலாம்பாடி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை குளித்து கொண்டிருந்தாா். காவிரி ஆற்றில் ரியாஸ்சுதீன் மனைவி ஹபிதா (38), ஹப்பா பாத்திமா (14) , முகமது ரபாக் (9) ஆகிய மூவரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனா். இதில் ஹபிதா, ஹப்பா பாத்திமா ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டனா். தீயணைப்பு துறை இரண்டு நாள்களாக தீவிரமாகத் தேடி வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை ஒகேனக்கல் அருகே தொம்பச்சிக்கல் என்னுமிடத்தில் சிறுவன் முகமது ரபாகின் உடலை மீட்டனா்.
பின்னா் ஒகேனக்கல் போலீஸாா் பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.