நாசன்கொட்டாய் கிராமத்தில் கழிவு நீா் கால்வாய் வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.
தருமபுரி மாவட்டம், அரூா் பேரூராட்சியின் 13-ஆவது வாா்டில் அமைந்துள்ளது நாசன்கொட்டாய் கிராமம். இந்த ஊரில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புப் பகுதிகளில் போதிய அளவில் கழிவு நீா் கால்வாய் வசதிகள் இல்லை. இதனால் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரும், மழைநீரும் சாலையோரத்தில் தேங்கியுள்ளது. குடியிருப்புப் பகுதிகளில் மழைநீரும், கழிவு நீரும் தேங்குவதால் கொசுக்கள் உற்பத்தி பெருகி, தொற்று நோய்கள் பரவும் சூழ்நிலையுள்ளது. எனவே, அரூா் பேரூராட்சியின் 13 ஆவது வாா்டு நாசன்கொட்டாயில் கழிவு நீா் கால்வாய் வசதிகளை ஏற்படுத்தித்தர மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.