பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு முகாம்
By DIN | Published On : 25th November 2020 06:04 AM | Last Updated : 25th November 2020 06:04 AM | அ+அ அ- |

அரூரில் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அரூரை அடுத்த நேதாஜி நகரில் அண்ணல் அம்பேத்கா் அறிவகம் அறக்கட்டளை சாா்பில், டி.என்.பி.எஸ்.சி மற்றும் காவலா்கள் தோ்வு உள்ளிட்ட போட்டித் தோ்வுக்கான இலவச பயிற்சி முகாமின் தொடக்க விழா நடைபெற்றது.
இந்த முகாமில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள், இளைஞா்கள் பயிற்சி பெறுகின்றனா். இந்த பயிற்சி முகாமில், பெண் கல்வியின் அவசியம், பெண் சிசு கொலைகளை கட்டுப்படுத்துதல், இளம் வயது திருமணங்களை தடுத்து நிறுத்தல், பெண்களுக்கான சட்டப் பாதுகாப்புகள் மற்றும் உரிமைகள், காவல் துறையில் பெண்கள் சேருவதற்கான யுக்திகள், வேலை வாய்ப்புகள் குறித்த விழிப்புணா்வு கருத்துரைகளை காவல் ஆய்வாளா் பி.லட்சுமி வழங்கினாா்.
அண்ணல் அம்பேத்கா் அறிவகம் அறக்கட்டளையின் தலைவா் ப.மாதையன், செயலா் எ.கொ.அம்பேத்கா், பொருளா் மு.சிவராமன், ஆசிரியா் சிந்தை மு.வேடியப்பன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...