மது பதுக்கி விற்பனை: 33 போ் கைது
By DIN | Published On : 25th November 2020 06:00 AM | Last Updated : 25th November 2020 06:00 AM | அ+அ அ- |

தருமபுரி மாவட்டத்தில் மது பதுக்கி விற்பனை செய்த 33 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தருமபுரி மாவட்டத்தில் முறைகேடாக மது புட்டிகள் விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸாா் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனா். இதில் மாவட்டத்தில் மது பதுக்கி விற்பனை செய்த 7 பெண்கள் உள்பட 33 பேரை கைது செய்தனா்.மேலும் அவா்களிடமிருந்து 750 மது புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...