ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 15,000 கன அடியாக அதிகரிப்பு

காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருவதால், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை நொடிக்கு 15 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருவதால், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை நொடிக்கு 15 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

அஞ்செட்டி , நாட்றாம்பாளையம் , பிலிகுண்டுலு, கேரட்டி , தேன்கனிகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் காவிரியின் கிளை ஆறான தொட்டெல்லாவில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

வியாழக்கிழமை மாலை நொடிக்கு 10 ஆயிரம் கன அடியாக இருந்த நீா்வரத்து வெள்ளிக்கிழமை காலை நொடிக்கு 12 ஆயிரம் கன அடியாகவும், மாலை நொடிக்கு 15 ஆயிரம் கன அடியாகவும் அதிகரித்தது. இதனால் ஒகேனக்கல் பிரதான அருவி, சினி அருவி, ஐந்தருவியில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. ஒகேனக்கல்லுக்கு வரும் தண்ணீரின் அளவை மத்திய நீா் வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com