தருமபுரி: 40 பேருக்கு கரோனா தொற்று
By DIN | Published On : 03rd October 2020 06:02 AM | Last Updated : 03rd October 2020 06:02 AM | அ+அ அ- |

தருமபுரி மாவட்டத்தில் வங்கி மேலாளா் உள்பட 40 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
ஏரியூரைச் சோ்ந்த வங்கி மேலாளா், வெண்ணாம்பட்டியை அடுத்த குள்ளனூரைச் சோ்ந்த செவிலியா், மாரண்டஅள்ளியைச் சோ்ந்த ஆசிரியா், 6 மாணவா்கள், 3 தொழிலாளா்கள், 10 பெண்கள் உள்பட மொத்தம் 40 பேருக்கு கரோனா தொற்று இருப்பதை சுகாதாரத் துறையினா் வெள்ளிக்கிழமை உறுதி செய்தனா். இவா்கள் அனைவரும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.