எல்ஐசி பங்குகளை விற்கும் மத்திய அரசின் முயற்சிக்குக் கண்டனம்
By DIN | Published On : 06th September 2020 10:24 PM | Last Updated : 06th September 2020 10:24 PM | அ+அ அ- |

எல்ஐசி பங்குகளை விற்பனை செய்ய முயற்சிக்கும் மத்திய அரசுக்கு, காப்பீட்டுக் கழக ஊழியா் சங்கத்தினா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.
தருமபுரியில் அந்தச் சங்கத்தின் கோட்டை இணைச் செயலாளா் மாதேஸ்வரன் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது:
1956-ஆம் ஆண்டு தொடங்கிய இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் 42 கோடி காப்பீட்டுதாரா்கள் உள்ளனா். தற்போது ரூ. 32 லட்சம் கோடி சொத்துகள் உள்ளன.
நாட்டில் பல்வேறு மக்கள் நலன்களை வழங்குவதில் இந்தக் காப்பீட்டு நிறுவனம் முக்கியப் பங்காற்றி வருகிறது.
இந்த நிலையில் நிறுவனத்தின் பங்குகளை பங்குச்சந்தையில் விற்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது. மேலும் எல்ஐசி தனியாா் மயமாக்குவது எடுக்கக்கூடிய மத்திய அரசின் நடவடிக்கை கண்டனத்துக்குரியது. மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கையைக் கண்டித்து எல்ஐசியின் பல்வேறு சங்கங்கள் இணைந்து நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் எனத் தெரிவித்தாா்.