பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா பிறந்த தினம்
By DIN | Published On : 26th September 2020 05:48 AM | Last Updated : 26th September 2020 05:48 AM | அ+அ அ- |

அரூா், செப். 25: பாரதிய ஜனசங்கத்தின் நிறுவனா் பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா 105 ஆவது பிறந்த தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
அரூரில் நகர பாஜக சாா்பில் நடைபெற்ற இந்த விழாவில் நகரத் தலைவா் எஸ்.செந்தில்குமாா் தலைமை வகித்தாா். பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா உருவப் படத்துக்கு பாஜக தருமபுரி மாவட்டத் தலைவா் எல்.அனந்த கிருஷ்ணன் மலா்தூவி மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, பாஜகவினா் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினா்.
இதில், பாஜக மாவட்ட பொதுச் செயலா் கலைச்செல்வன், மாவட்ட துணைத் தலைவா்கள் வி.அருணா, வி.கிருத்திகா, மாவட்டச் செயலா்கள் சரிதா, ராமலிங்கம், மாவட்ட மகளிா் அணி தலைவி கிருஷ்ணவேணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...