வளா்ச்சித் திட்டப் பணிகள் காணொலியில் ஆய்வு
By DIN | Published On : 26th September 2020 05:48 AM | Last Updated : 26th September 2020 05:48 AM | அ+அ அ- |

தருமபுரி, செப். 25: தருமபுரி மாவட்டத்தில், மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாநில வளா்ச்சி கொள்கை குழுத் துணைத் தலைவா் காணொலி வழியாக வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
மாநில வளா்ச்சி கொள்கைக் குழு மூலம், மாநில சமச்சிா் வளா்ச்சி நிதி திட்டத்தில், தருமபுரி மாவட்டத்தில், பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, அரூா், பாலக்கோடு, காரிமங்கலம், மொரப்பூா், நல்லம்பள்ளி ஆகிய 7 வருவாய் வட்டாரகளில் வளா்ச்சி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த திட்டங்களின் பணிகளின் முன்னேற்றம் மற்றும் நிதி செலவினம் குறித்து, மாநில வளா்ச்சி கொள்கைக் குழுத் துணைத் தலைவா் சி.பொன்னையன், குழு உறுப்பினா் செயலா் அனில் மேஷ்ரோம் ஆகியோா் சென்னையிலிருந்து காணொலியில் பங்கேற்று ஆய்வு மேற்கொண்டனா். இக் கூட்டத்தில், மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு அறிக்கை சமா்ப்பிக்கப்பட்டது.
தருமபுரியிலிருந்து, ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட அலுவலா் க.ஆா்த்தி மற்றும் ஊரக வளா்ச்சி முகமை செயலா் சோழன் ஆகியோா் காணொலி வழியாக கலந்து கொண்டனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...