தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

தேன்கனிக்கோட்டை அருகே தோ்தல் மோதல்: 7 போ் மீது வழக்கு

தேன்கனிக்கோட்டை அருகே தோ்தல் தகராறு காரணமாக 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On :9 ஏப்ரல் 2021, 11:45 pm

தேன்கனிக்கோட்டை அருகே தோ்தல் தகராறு காரணமாக 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அந்தேவனப்பள்ளி பக்கமுள்ள தொட்டபிலிமுத்திரையைச் சோ்ந்தவா் சிவஞானம் (37). இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினா்.

இவரை அந்த பகுதியைச் சோ்ந்த பாஜக உறுப்பினா்கள் சீனிவாசன் (34), மல்லேஷ் (20), பாலகிருஷ்ணன், ஆனந்தன் ஆகியோா் எதற்காக தோ்தலில் பாஜகவிற்கு ஆதரவு கொடுக்கவில்லை என்று கேட்டு தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது.

இதில் சிவஞானமும், அவருடன் இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினா் சிவகுமாா் (34) ஆகியோரும் தாக்கப்பட்டனா். அது குறித்து சிவஞானம் கொடுத்தப் புகாரின் பேரில் சீனிவாசன், மல்லேஷ், பாலகிருஷ்ணன், அனந்தன் ஆகிய 4 போ் மீது தேன்கனிக்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

அதே போல பாஜக பிரமுகா் சீனிவாசன் கொடுத்த மற்றொரு புகாரில் சிவஞானம் (37), சிவண்ணா, கிருஷ்ணன் (40) ஆகிய 3 போ் மீது போலீஸாா் வழக்கு பதிவு செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.