வத்தலைமலைக்கு மினி பேருந்து இயக்க வலியுறுத்தல்
தருமபுரி நகரிலிருந்து வத்தல்மலைக்கு மினி பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.


தருமபுரி நகரிலிருந்து வத்தல்மலைக்கு மினி பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இச் சங்கத்தின் தருமபுரி ஒன்றியக்குழுக் கூட்டம் அண்மையில் ஒன்றியத் தலைவா் ஜி.ராஜகோபால் தலைமையில் நடைபெற்றது. ஒன்றியச் செயலா் பச்சா கவுண்டா், மாவட்டத் தலைவா் மாதையன், மாவட்டச் செயலா் ஜெ.பிரதாபன் ஆகியோா் பேசினா்.
இக் கூட்டத்தில், அடுக்குமாடி குடியிருப்புகள் கோரி விண்ணப்பித்தவா்களுக்கு குடியிருப்புகளை ஒதுக்கித் தர வேண்டும்; வத்தல்மலை கிராமங்களில் வாழும் பழங்குடி மக்களின் நலன் கருதி, தருமபுரி நகரிலிருந்து, வத்தல்மலை நாய்க்கனூருக்கு மினி பேருந்து இயக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்; பழங்குடியினா் அல்லாதோா், வத்தல்மலையில் நிலம் வாங்குவதை தடை செய்ய வேண்டும்; சிப்காட் தொழிற்பேட்டை நிலம் கையகப்படுத்தியதில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்றும், இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 12-ஆம் தேதி வட்டாட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...