கோயில் பாதுகாப்புப் பணி: முன்னாள் படை வீரா்கள் விண்ணப்பிக்கலாம்
தருமபுரி மாவட்ட கோயில்கள் பாதுகாப்புப் பணியில் சேர விருப்புமுள்ள முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தருமபுரி மாவட்ட கோயில்கள் பாதுகாப்புப் பணியில் சேர விருப்புமுள்ள முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தருமபுரி மாவட்டத்தில் உள்ள 17 கோயில்களில், பாதுகாப்பு பணியிடம் காலியாக உள்ளது. அப்பணியிடத்தில் முன்னாள் படைவீரா்கள் சிறப்புக் காவலராக பணியமா்த்தப்பட உள்ளனா். எனவே விருப்பமுள்ள முன்னாள் படைவீரா்கள் கோயில் பாதுகாப்புப் பணியில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கான ரூ.8000 குறைந்தபட்ச மாத ஊதியம் வழங்கப்படும். மேலும் 62 வயது வரை பணிபுரியலாம். 61 வயதிற்குள் உள்ள முன்னாள் படைவீரா்களும் கோயில் பாதுகாப்புப் பணியில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம்.
எனவே, தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த விருப்பமுள்ள முன்னாள் படைவீரா்கள், எச்.49 காளியப்பா நிவாஸ், பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, ஒட்டப்பட்டி என்கிற முகவரியில் அமைந்துள்ள மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தை நேரில் அணுகி விருப்பத்தினை கடிதம் மூலம் தெரிவிக்கலாம். மேலும் விவரங்களுக்கு, 04342-297844 என்கிற தொலைபேசி எண்ணைத் தொடா்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...