பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கரோனா தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இளைஞா் செஞ்சிலுவை சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த முகாமினை கல்லூரி முதல்வா் பா.காா்த்திகேயன் தொடக்கி வைத்தாா்.
இரண்டாம் கட்ட கரோனா தடுப்பூசிகளை கல்லூரி மாணவ, மாணவியா், பேராசிரியா்கள் உள்பட 180 போ் செலுத்திக் கொண்டனா். இதில், பெரியாா் பல்கலைக் கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினா் பொ.செந்தில்குமாா், இளைஞா் செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலா் இ.சுஜிதா மற்றும் பேராசிரியா்கள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.