கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

பெட்ரோல், சமையல் எரிவாயு விலை உயர்வு மக்களை பின்னோக்கி நகர்த்துகிறது: கனிமொழி எம்.பி.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு, மக்களை பின்னோக்கி நகர்த்துகிறது என திமுக மகளிரணிச் செயலர் கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.

News image
பழைய தருமபுரியில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் பேசுகிறார் திமுக மகளிரணிச் செயலர் கனிமொழி எம்.பி.
Updated On :16 பிப்ரவரி 2021, 8:16 am

DIN

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு, மக்களை பின்னோக்கி நகர்த்துகிறது என திமுக மகளிரணிச் செயலர் கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பழைய தருமபுரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சயில் திமுக மகளிரணிச் செயலர் கனிமொழி எம்.பி. சுய உதவிக்குழு உறுப்பினர்களை சந்தித்து அவர்களிடம் குறைகள் கேட்டறிந்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை விலை தொடர்ந்து உயர்தப்படுகிறது. இதனால், மக்கள் கடுமையான இன்னல்களை சந்திக்கின்றனர். திமுக ஆட்சியில் பெண்களுக்கு இலவசமாக சமையல் எரிவாயு உருளைகள் வழங்கப்பட்டன. இதனால், விறகு அடுப்பு பயன்படுத்தி வந்த பெண்கள், எரிவாயு பயன்படுத்தத் தொடங்கினர். இதனால் பெண்களின் வாழ்வாதாரம் மேம்பட்டது.

தற்போது விலை ஏற்றத்தால் மீண்டும் விறகு அடுப்புக்கு செல்லும் நிலை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதேபோல, பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தால், வாகனங்களின் பயன்பாட்டை தவிர்த்து, மாட்டு வண்டிகளை பயன்படுத்தும் சூழலுக்கு விவசாயிகள், பொதுமக்கள் சென்றுள்ளனர். இந்த விலை ஏற்றத்தால், மக்கள் பின்னோக்கி நகர்த்தப்படுகின்றனர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால், உணவு உள்ளிட்ட அனைத்து பொருள்களின் விலையும் உயரும். விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை தமிழக அரசு ஆதரிக்கிறது. தமிழகத்தில் புதிய தொழில்கள் தொடங்கப்படவில்லை. ஏற்கெனவே மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை உள்பட பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் மட்டுமே நாட்டப்பட்டது.

திமுக அளித்துவரும் அனைத்து வாக்குறுதிகள் அனைத்தும் ஆட்சி அமைந்தால், நிறைவேற்றப்படும். தருமபுரி மாவட்டம், கல்வியில் பின்தங்கியுள்ளது. மாநில அளவில் கல்வியறிவு பெற்றோர் 85 சதவீதமாக உள்ளது. ஆனால், தருமபுரி மாவட்டம், 67 சதவீதம் மட்டுமே கல்வியறிவு பெற்றுள்ளது. ஒகேனக்கல் குடிநீர்த் திட்டம் 100 சதவீதம் முழுமைப்படுத்தப்படும். இதேபோல, ஒகேனக்கல் மிகை நீர்த்திட்டம் திமுக ஆட்சி அமைந்தால், நிச்சயம் நிறைவேற்றப்படும் என்றார்.

திமுக மாவட்டச் செயலர் தடங்கம் பெ.சுப்ரமணி எம்எல்ஏ, முன்னாள் எம்பி இரா.தாமரைச்செல்வன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.